நாட்டில் மரக்கறிகளின் விலை உயரும் அபாயம்
சீரற்ற காலநிலையால் அதிகளவான மரக்கறி பயிரிடப்பட்ட நிலங்கள் அழிவடைவதால் எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலை உயரும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 15,000 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக அழிவடைந்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு ( Ministry of Agriculture) தெரிவித்துள்ளது.
இதனால், பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.
அதிகளவான மரக்கறிகள் அழிவு
மழையினால் மரக்கறிகள் பயிரிடப்பட்ட பல காணிகள் அழிவடைந்துள்ளதாக அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது. அனைத்து பயிர் சேதங்கள் தொடர்பிலும் உடனடியாக அறிக்கை வழங்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்திக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதிகளவான மரக்கறி பயிரிடப்பட்ட நிலங்கள் அழிவடைவதால் எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலை உயரும் வாய்ப்புள்ளதால் தோட்டக்கலை திட்டங்களை ஆரம்பிக்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களங்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
மேலும், சீரற்ற காலநிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 958 குடும்பங்களைச் சேர்ந்த 3641 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |