மீண்டும் முடங்கும் அபாயத்தில் பாடசாலைகள்: வெளியான காரணம்
12 ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் தமது உரிமைகளுக்காக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும் (Shehan Semasinghe), இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கும் இடையில் நிதியமைச்சில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
பாடசாலை கற்றல் நடவடிக்கைகள்
இதன்போது, சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்படாததையடுத்து, எதிர்வரும் 12ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் தமது உரிமைகளுக்காக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த பணிப்புறக்கணிப்பின் காரணமாக 12 ஆம் மற்றும் 26ஆம் ஆகிய திகதிகளில் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் முடங்கும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |