யாழில் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்த மாற்றுத்திறனாளி
Jaffna
Ceylon Electricity Board
Death
By Kajinthan
யாழில் இன்றையதினம் மின்சாரம் தாக்கி மாற்றுத்திறனாளி ஒருவர உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவருக்கு பிறப்பிலேயே கை, கால்கள் என்பன செயற்பாடுகள் அற்று காணப்படுகின்றன.
வாயினால் மின் இணைப்பை பெற முயற்சி
இன்று முற்பகல் 10 மணியளவில் தனது வாயினால் மின்சார ஆழியினுள் மின் இணைப்புக்காக வயரினை செருக முற்படும்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்