காலி சிறைச்சாலையில் மேலும் ஒருவர் மூளைக்காய்ச்சலால் பாதிப்பு
Galle
Sri Lanka
By Sathangani
காலி சிறைச்சாலையில் மீண்டும் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார் .
இவர் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகச் சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் மூளைக் காய்ச்சல் நோயாளிகள் வேறு எவரும் சிறைச்சாலையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
மூளைக் காய்ச்சல்
கடந்த காலங்களில் காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகிய நிலையில், இரண்டு நோயாளிகள் உயிரிழந்தனர்.
இதேவேளை இந்த நோயைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை சுகாதார பிரிவால் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 53 நிமிடங்கள் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி