மீனுவாங்கொடை துப்பாக்கிச் சூடு கொலைவழக்கில் தொடபுடைய நபர் போதைப்பொருளுடன் கைது
துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் இன்று (22.08.2026) விசேட சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் திகதி மீனுவாங்கொடை பகுதியில் 36 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியொருவர் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மீனுவாங்கொடை துப்பாக்கிச் சூடு
கொலைச் சம்பவத்திற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 11 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவத்தில் சந்தேகநபரின் பங்கு மற்றும் போதைப்பொருள் தொடர்பான விடயங்கள் குறித்து மீனுவாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening