பழம்பெரும் பாடகி நந்தா மாலினியின் இறுதிச் சடங்குகள் இன்று
தலைசிறந்த இசைக் கலைஞர் நந்தா மாலினியின் பூதவுடல் தொடர்பான இறுதிக்கிரியைகள் இன்று (22) இடம்பெறவுள்ளன.
புகழ்பெற்ற இலங்கைப் பாடகி நந்தா மாலினி, தனது 82 ஆவது வயதில், நாவலவில் உள்ள தனது இல்லத்தில் இன்று (20) காலமானார்.
அன்னாரது பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தற்போது நாவல, விஜயபாகு மாவத்தையில் அமைந்துள்ள நந்தா மாலினி சங்கீத ஆச்சிரமத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதி அஞ்சலி
அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை (22) மாலை 5.00 மணிக்கு பொரளைப் பொது மயானத்தில் நடைபெறும் என பேராசிரியர் சுனில் அரியரத்ன தெரிவித்துள்ளார்.

நாவலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருமளவிலான மக்கள் தொடர்ந்தும் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை காலமான பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தார்.
மேலும் அன்னாரின் பூதவுடலுக்கு பாடகர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பவரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |