நீதிமன்றில் காணொளி பதிவு செய்தவருக்கு நீதவான் கொடுத்த உத்தரவு
கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்றவேளை நீதிமன்ற வளாகத்தில் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி காணொளியை பதிவு செய்ததாக கூறப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு அளுத்கடை நீதவான் நீதிமன்றம் நேற்று (29) உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற சார்ஜன்டினால் கைது செய்யப்பட்ட நபர் சிறைச்சாலை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு கொம்பஞ்சாவீதி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் குறித்த நபர் மற்றும் தொலைபேசி தொடர்பிலான விசாரணைகளை நிறைவு செய்த பின்னர் நீதவான் சஞ்சீவனி பவித்ரா அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் இருவர் கைது
சந்தேக நபருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலைத் திட்டம் தொடர்பில் விசாரணை
கொலைத் திட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் திலின கமகே விசாரணைகளை மேற்கொண்டபோது, குறித்த நபர் இவ்வாறான காணொளிகளை பதிவு செய்ததாகவும், இவரின் கையடக்கத் தொலைபேசி தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |