விலைமதிப்பற்ற சிலையை விற்கச் சென்றவர் பிடிபட்டார்
Sri Lanka Police
STF
Vavuniya
Sri Lanka
By Sumithiran
பழங்கால பெறுமதி மிக்கதாக சந்தேகிக்கப்படும் சிலையை மோசடியான முறையில் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
கிடைத்தது இரகசிய தகவல்
விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய வவுனியா முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, வவுனியா முகாம் கட்டளை அதிகாரி காவல்துறை பரிசோதகர் ஏ.எம்.பி.என். மொறகொட, உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று மெகொடவெவ வீடொன்றில் வைத்து இவற்றைக் கைதுசெய்துள்ளது.
பழங்கால பெறுமதி மிக்கதாக சந்தேகிக்கப்படும் சிலையொன்றை அனுமதிப்பத்திரம் இன்றி 12 துவாரங்களுடன் விற்பனை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் மொரகொட காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
