கையூட்டு பெற்ற முல்லைத்தீவு வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் கைது!
முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலையில் பணிபுரியும் கணக்காளர் மற்றும் மேலாண்மை உதவியாளர் ரூ. 30,000 இலஞ்சம் கேட்டுப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (18.04.2026) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்திற்கான வைத்தியசாலையின் படுக்கை விரிப்புகளைத் துவைத்து சுத்தம் செய்யும் ஒப்பந்தம் தொடர்பான காசோலையை விடுவிப்பதற்காக சந்தேக நபர்களால் பணம் கோரப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாடை தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |