ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் ஜனாதிபதி பதிலடி!
ஈரான் மீது மேலும் பல கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கைகளுக்கு மத்தியில், தனது நாடு இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக உறுதியாக நிற்கும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் (X) சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்துத் தாக்கப்போவதாக விடுக்கப்படும் எச்சரிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
நாட்டின் போக்குவரத்து நெட்வொர்க்குகள், மின்சாரம் மற்றும் நீர் விநியோகத் தொழில்கள் உள்ளிட்ட பொது உள்கட்டமைப்புகளைத் தாக்குவோம் என அச்சுறுத்துவது அமெரிக்காவின் வலிமையைக் காட்டவில்லை என்றும், மாறாக ஒரு தேசத்தின் மனஉறுதிக்கு முன்னால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள விரக்தியின் அறிகுறியே இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் அறிக்கைக்கு பதில்
ஈரான் மீது தனது நிர்வாகம் மிகக் கடுமையான தாக்குதல்களை முன்னெடுக்கும் என்று ட்ரம்ப் அறிக்கை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஜனாதிபதியின் இந்த அதிகாரப்பூர்வப் பதிவு வெளியாகியுள்ளது.

அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்திய நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் பதற்றங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 8 மணி நேரம் முன்