அடங்காத பீட்டா! ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க சீராய்வு மனு
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி, விலங்குகள் நல அமைப்பான பீட்டா (PETA) உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு பீட்டா அமைப்பு தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அதில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு தமிழகத்தில் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியது.
ஜல்லிக்கட்டுக்கு தடை
எனினும் பீட்டா அமைப்பு முயற்சியைக் கைவிடவில்லை. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அந்த அமைப்பின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விபரங்கள்
எனினும் அந்த மனு மீதான விசாரணை இதுவரை தொடங்க வில்லை. எனவே, சீராய்வு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு கோரியுள்ளது.
இது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்த பின்னர் வழக்கு விபரங்களை மின் அஞ்சலில் அனுப்ப பீட்டா தரப்புக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார்.
அந்தவகையில், இந்த வழக்கு விரைவில் மீள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |