அவசரகாலச் சட்டங்களுக்கு எதிரான 2 மனுக்களும் உச்ச நீதிமன்றால் தள்ளுபடி
தித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விதித்த அவசரகால விதிமுறைகள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகக் கூறி, தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்களை மேலும் விசாரிக்காமல் தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த முடிவை தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு எடுத்தது.
முன்னதாக அநுரகுமார திசாநாயக்கவால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அடிப்படை உரிமை மீறல்
மனுதாரர்கள் தரப்பில், குறித்த அவசரகாலச் சட்டங்கள் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுகின்றன எனக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் அமைதியான கூடுகை உரிமை போன்றவை பாதிக்கப்படுகின்றன என மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றம் மனுக்களை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டு, தொடர்புடைய தரப்புகளிடம் பதில் கோரியுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது.
அவசரகாலச் சட்டங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை உறுதி செய்வதற்காக அறிவிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அவற்றின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து நீதிமன்றத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |