யாழில் வீடொன்றிற்குள் பெற்றோல் குண்டு வீசி சரமாரி தாக்குதல்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kanooshiya
யாழில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு வீசி வீடொன்றில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு 10.45 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொறுப்பதிகாரி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த வீட்டிலுள்ளவர்கள், வெளிக்கதவை மூடிவீட்டு வீட்டிற்குள் இருந்த நிலையில் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வராது அயலவவர்களை அழைத்த போது தாக்குதல் நடாத்தியவர்கள் வீட்டின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் நேரடியாகச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி