யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது அதிகாலைவேளை பெட்ரோல் குண்டுத்தாக்குதல்
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Kajinthan
யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றின்மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத கும்பல் ஒன்றினால் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
அத்துமீறி உள்நுழைந்த குழு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கிவிட்டு பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுன்னாகம் காவல்நிலையத்தில் முறைப்பாடு
இது குறித்து சுன்னாகம் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த சுன்னாகம் காவல்துறையினரும், தடயவியல் காவல்துறையினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
2 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்