QR குறியீட்டு முறைமை இன்றி எரிபொருள்! பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு
By Thulsi
QR குறியீட்டு முறைமை இன்றி பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டே இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த விடயத்தை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணியாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
நள்ளிரவு வரை நடைமுறையில்
அதன்படி, இன்று (11) நள்ளிரவு முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த நடைமுறையில் இருக்கும் என மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்தக் காலப்பகுதியில் ஒற்றை, இரட்டை நடைமுறை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்