எரிபொருள் போட்டி விலையில் விற்கப்பட்டால், இந்தப் பிரச்சினை இருக்காது: பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம்
இலங்கை IOC, சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க் நிறுவனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை கடுமையாக கட்டுப்படுத்தி வருவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (14.09.2026) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அச்சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
குறித்த நிறுவனங்கள் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் விலைக்கும், அதனை சந்தையில் விற்பனை செய்யும் விலைக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விநியோகம்
மேலும் அவர் குறிப்பிடுகையில் “இதன் காரணமாக தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வதால் தாங்கள் பெரும் நட்டத்தை எதிர்கொள்வதாக அந்த நிறுவனங்கள் கலந்துரையாடலின்போது தெரிவித்தேன்.

இந்த நட்டத்தை குறைத்துக்கொள்ளும் நோக்கில், சந்தைக்கு எரிபொருள் விநியோகிப்பதை குறித்த நிறுவனங்கள் மட்டுப்படுத்தியுள்ளது.
இதனால் பொதுமக்கள் மாத்திரமன்றி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களை தொடர்ந்து நடத்திச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தங்களது வெளிநாட்டு நாணயத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக எரிபொருளை வழங்குவதாக குறித்த நிறுவனங்கள் ஆரம்பத்தில் உறுதியளித்திருந்தது.
அத்துடன், அரசாங்கம் எரிபொருளுக்கான விலையை நிர்ணயிக்காது, போட்டித்தன்மை கொண்ட விலையில் எரிபொருளை விற்பனை செய்ய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
எனினும், அந்த நிறுவனங்கள் நாட்டில் செயல்படத் தொடங்கிய பின்னர், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் விலைக்கே எரிபொருளை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நட்டத்தில் எரிபொருளை விற்பனை செய்வது கடினமாக இருப்பதாக நிறுவனங்கள் தெரிவித்திருந்தது.
போட்டித்தன்மை கொண்ட விலையில் எரிபொருளை விற்பனை செய்ய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால், தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 1 நாள் முன்