மக்களே அவதானம்! வீடு புகுந்து கைவரிசை காட்டும் திருட்டுக்கும்பல் (படங்கள்)

Batticaloa Jaffna Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Vanan Jul 07, 2022 08:30 AM GMT
Report

 யாழில் வீடு புகுந்து பெட்ரோல் திருட்டு

யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த திருட்டுக் கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடிச் சென்றுள்ளது.

கல்வியங்காடு - புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மக்களே அவதானம்! வீடு புகுந்து கைவரிசை காட்டும் திருட்டுக்கும்பல் (படங்கள்) | Petrol Theft By House Entry In Jaffna

குறித்த வீட்டார் நேற்றுக் காலை வீட்டில் இருந்த துவிச்சக்கர வண்டியை காணவில்லை எனத் தேடிய போதே , மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டு உள்ளமையையும் கண்டறிந்தனர்.

அதனை அடுத்து வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்புக் கமராவில் பரிசோதித்த போது , வீட்டினுள் நுழைந்த திருடன் துவிச்சக்கர வண்டியையும் , மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலையும் திருடிக்கொண்டு செல்வதனை அவதானித்துள்ளனர்.

திருடிய போது தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

மக்களே அவதானம்! வீடு புகுந்து கைவரிசை காட்டும் திருட்டுக்கும்பல் (படங்கள்) | Petrol Theft By House Entry In Jaffna

இதேவேளை, வாழைச்சேனையில் திருடிய போது மோட்டார் சைக்கிளொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - 01, சீனிப்போடியார் வீதியிலுள்ள வீடொன்றிலே இச்சம்பவம் நேற்றுமுன்தினம் (5) காலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டு முன்றலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்த பெட்ரோலை திருடன் ஒருவன் திருடும் போது வெளிச்சத்தை ஏற்படுத்த சிகரெட் லைட்டரை பயன்படுத்திய போது மோட்டார் சைக்கிள் தீப்பற்றியுள்ளதுடன், வீட்டின் கூரை மற்றும் கதவு, ஜன்னல்கலும் தீப்பற்றி எரிந்துள்ளன.

மோட்டார் சைக்கிள் தீப்பற்றிய போது அதனை திருடன் அனைப்பதற்காக தண்ணீர் என்று நினைத்து வாளியொன்றிலிருந்த பெயின்ட் பூசும் டின்னரை மோட்டார் சைக்கிளில் ஊற்றிய போது மோட்டார் சைக்கிள் வேகமாகத் தீப்பற்றியுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

கூக்குரல் எழுப்பிய திருடன்

மக்களே அவதானம்! வீடு புகுந்து கைவரிசை காட்டும் திருட்டுக்கும்பல் (படங்கள்) | Petrol Theft By House Entry In Jaffna

இவ்வாறு தீப்பற்றிய போது மோட்டார் சைக்கிள் எரிகிறது எழும்புங்கள் என்று கூக்குரல் ஒன்று கேட்டவுடன் தாம் எழுந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாதக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதனால் தமது வாகனங்களையும், உடமைகளையும் அவதானமாக வைத்திருக்குமாறு மக்களை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி