அஸ்ட்ரா செனகா தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு இராணுவத் தளபதி வெளியிட்ட முக்கிய செய்தி
அஸ்ட்ரா செனகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதலாவது தடவையாக பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ள 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முதற்கட்டமாக இன்று முதல் பைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
அதன்படி கொழும்பு 1 - 15 வரையான பிரதேசங்களில் இன்று முதல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், நேற்று முன்தினம் 26,000 பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன. அஸ்ட்ரா செசெனகா தடுப்பூசியை முதல் தடவையில் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக அதனை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் திகதி மற்றும் நேரம் போன்ற விபரங்கள் குறுந்தகவல் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.