மாணவர்கள் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
student
shavendrasilva
pfizer vaccine
By Sumithiran
18 – 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும் திகதியை இராணுவத்தளபதியும் கொவிட் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திரசில்வா (Shavendra Silva)அறிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மாணவர்கள் தமது பாடசாலைகளிலேயே பைசர் (Pfizer) தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாடசாலைக்கு செல்லாத 18 – 19 வயதுக்கிடைப்பட்டவர்கள் தாம் வசிக்கும் பகுதியிலுள்ள பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.