பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட புதிய அறிவிப்பு
corona
sri lanka
people
By Shalini
மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (03) நடைபெற்ற கொரோனா ஒழிப்பு விசேட குழுவின் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
மேலும் 20 முதல் 29 வயதிற்கு இடைப்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கையை அடுத்த 2 வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசியேற்றும் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சுகாதார தரப்பு, பாதுகாப்பு தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.