கெஹல்பத்ரவின் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட போதைப்பொருள் இரசாயனங்கள் ஆய்வுக்கு
மிதெனிய, தலாவ பகுதியில் உள்ள ஒரு காணியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மருந்து இரசாயனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுப்பாய்வாளரின் வருகைக்கமைய இன்று (06) ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இங்கு சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள்
மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த இரசாயனங்கள் நேற்று (05) மேற்கு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பெக்கோ சமனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டன.
இதன்படி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மே, ஐஸ் என்ற போதைப்பொருள் உற்பத்தி தொடர்பான இரசாயனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்ததாக பெக்கோ சமன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த இரசாயனங்கள் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர் மற்றும் அவரது சகோதரரால் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இந்தநிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தற்போது இருவரும் தப்பி ஓடிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சமீபத்தில் மித்தெனிய பகுதிக்கு பெக்கோ சமன் கொண்டு வரப்பட்டபோது பயந்துபோன இரண்டு சகோதரர்களும், வேறு இடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இந்த இரசாயனங்களை இந்த நிலத்திற்கு கொண்டு வந்து புதைத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று (05) குறித்த இடத்தில் கொங்கிரீட் ஊற்றுவதற்கு தயாராகி வந்ததற்கான ஆதாரங்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த இரசாயனங்களைப் பயன்படுத்தி சுமார் 200 கிலோகிராம் ஐஸ் தயாரிக்க முடியும் என்று விசாரணையை நடத்திய காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
