பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி சோதனை: தெல்லிப்பழையில் உணவகத்திற்கு சீல்
Jaffna
Sri Lanka Magistrate Court
By Sathangani
யாழ்ப்பாணம் (Jaffna)- தெல்லிப்பழையிலுள்ள பிரபல உணவகம் ஒன்று திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து 14 நாட்களுக்கு பூட்டப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை மற்றும் கீரிமலை பொதுசுகாதார பரிசோதகர்களான லதன் மற்றும் உமாசுதன் ஆகியோரால் கே.கே.எஸ் வீதியிலுள்ள குறித்த உணவகம் இன்று (17) சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது அந்த உணவகத்தில் பல சுகாதார குறைபாடுகள் இனங்காணப்பட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த உணவகத்திற்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து 65000 ரூபா தண்டப்பணம் மற்றும் 14 நாட்களுக்கு உணவகத்தை மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கமைய குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |