பயணிகளுக்காக அறிமுகமான பொது மக்கள் முறைப்பாட்டு இலக்கம்
வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் (Northern Provincial Road Passenger Transport Authority) பொது மக்கள் முறைப்பாட்டு இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்தின் போது பொது மக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்கள், இடர்பாடுகளை முறையிடுவதற்காக இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த இலக்கத்தினை கொண்ட விழிப்புணர்வு பிரசுரத்தை பேருந்துகளில் ஒட்டும் பணி கிளிநொச்சியில் இன்று (22) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடு
ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நடவடிக்கை மூலம் வடமாகாணத்தில் பொது மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை முறையிடுவதற்காக குறித்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் பிரசுரங்களை பேருந்துகளில் ஒட்டும் பணிகள் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ஏனைய நான்கு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி பேருந்து நிலைய பொறுப்பதிகாரி ஈஸ்வரதேவன் கோபிதன் தலைமையில் நடைபெற்ற இந்த மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




