கைபேசிக்கு விசேட விலைக்கழிவு - போலியான விளம்பரம் மூலம் யாழ். இளைஞனிடம் பண மோசடி

Sri Lanka Police Ampara Jaffna Mobile Phones
By Sathangani Oct 07, 2025 04:28 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழிவில் விற்பனை செய்யப்படும் என்ற போலியான விளம்பரத்தை பார்த்து இலங்கையைச் சேர்ந்த பலர் பல இலட்சம் ரூபா பணத்தினை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் குறித்த விளம்பரத்தினை நம்பி இலட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், 29ஆம் குடியேற்றத்திட்டம், பாண்டிருப்பு - 02, கல்முனை என்ற முகவரியை சேர்ந்த நபர் ஒருவர் விலையுயர்ந்த கைபேசிகளின் இருப்பு இருப்பதாகவும், விசேட விலைக்கழிவில் 334,000 ரூபாவுக்கு அதனை வழங்குவதாகவும் கூறி சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனை - தலைவர் பிரபாகரனை காப்பாற்றிய போர் நிறுத்தம்: சரத் பொன்சேகா

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனை - தலைவர் பிரபாகரனை காப்பாற்றிய போர் நிறுத்தம்: சரத் பொன்சேகா

சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கை

இந்த விளம்பரத்தை நம்பி பலர் அவரை தொடர்புகொண்ட வேளை கைபேசியை வீட்டுக்கு கொண்டு சென்றே வழங்குவதாக கூறி முற்பணம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் பலர் அவரது கணக்கு இலக்கத்துக்கு பணத்தை வைப்புச் செய்துள்ள நிலையில் அதன்பின்னரே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர்.

கைபேசிக்கு விசேட விலைக்கழிவு - போலியான விளம்பரம் மூலம் யாழ். இளைஞனிடம் பண மோசடி | Phone Special Discount Money Laundering In Jaffna

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் இவ்வாறு ஒரு இலட்சத்து எழுபத்தோராயிரம் ரூபாவை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இதேவேளை இது சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் நேற்றையதினம் (06) வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று கல்முனை காவல்துறையினர் ஊடாக குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை

சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை

சற்று முன்னர் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள்

சற்று முன்னர் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025