சிறையில் தொலைபேசி பாவனை: தேடுதல் வேட்டையில் சிக்கிய பொருட்கள்
Sri Lanka Police
Sri Lanka
By pavan
காலி - பூஸா சிறைச்சாலை வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பொருட்கள் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது பழைய சிறைச்சாலை கட்டடத் தொகுதியின் A மற்றும் D பிரிவுகளிலிருந்து 2 கையடக்க தொலைபேசிகள், சிம் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
மேலும், கைப்பற்றப்பட்ட பொருட்கள், காவல்துறை விஷேட அதிரடிப்படையின் காலி பிராந்திய கட்டளை அதிகாரியின் அலவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்