சுமோவின் புகைப்படத்தைக் கேட்ட சைக்கிள் கட்சி! எதற்குத் தெரியுமா?
‘தமிழரசுக் கட்சியின் முந்திரிக்கொட்டை’ என்று ஒரு காலத்தில் செல்லமாக அழைக்கப்பட்ட சுமோவின் புகைப்படத்தை தருமாறு நகைச்சுவையாகக் கேட்டுள்ளார்கள் சைக்கிள் கட்சி முக்கியஸ்தர்கள்.
அண்மையில் அயல்நாட்டுத் தூதுவர் வைத்த விருந்தில் கலந்துகொள்ளச் சென்ற சுமோவுடன் இணைந்து அமர்வதற்கு தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் தயக்கம் காண்பிக்க, கடைசியில் சைக்கிள் தம்பிகளின் மேசையில் இடம்பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கின்றார் சுமோ.
“அண்ண.. உங்கட படம் இருந்தா தாங்கோ..” என்று பேச்சுவாக்கில் கேட்டுள்ளார் சைக்கிள் கட்சியின் சின்னத்தம்பி.
“எதுக்கு என்னுடைய படம்?’ என்று சுமோ கேட்க.. “பிரேம் போட்டு எங்கட கட்சி அலுவலகத்தில மாட்டி வைக்கத்தான்..” என்று பதில் வழங்கியுள்ளார் சைக்கிள் சின்னத்தம்பி.
இடைநடுவே புகுந்து பேசிய சைக்கிள் கட்சியின் பெரியதம்பி, “ எங்கட கட்சியில் தலைவர்களின் புகைப்படங்களை தொங்கவிடும் பழக்கம் இல்லை. ஆனால் சுமோவினதும், சம்பந்தரினதும் புகைப்படங்களை பிரேம் போட்டு சுவரில் மாட்டிவைக்க விரும்புகிறோம். ஏனென்றால் எங்களது கட்சியை வளர்த்த பெருமை உங்கள் இருவரைத்தான் சாரும். அதனால்தான் தம்பி படம் கேக்கிறார்’ என்று சிரித்துக்கொண்டு கூறினாராம்.
சுமோவின் முகத்தில 'ஈ' ஆடவில்லையாம்.
'இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் இரண்டு தட்டு கூடத் தட்டுவானாம்..' என்று ஊரில சொல்லுவது சுமோ விசயத்தில நிமரூபணமாகிறது.