இலங்கையின் மிக உயரமான மலை! மீண்டும் மக்கள் பார்வைக்காக
சுற்றுலாப்பயணிகளுக்காக இலங்கையின் மிக உயரமான மலைத் தொடரான பீதுருதாலகால மலைத் தொடரை மீண்டும் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (13) இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தடைசெய்யப்பட்ட பிரதேசம்
அங்கு மிகக்குறைந்த வெப்பநிலை காணப்படுவதனாலும், பராமரிப்பதில் இருந்த சிரமங்கள் காரணமாக மக்களுக்கு தடைசெய்யப்பட்ட பிரதேசமாக இந்த இடம் அறிவிக்கபட்டிருந்தது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள இந்த மலைத் தொடர் நாட்டில் மிக உயரமான மற்றும் பூஜ்ஜிய வெப்பநிலையை கொண்ட பகுதியாக உள்ளது.
மீண்டும் திறக்கப்படவுள்ளது
இந்த பீதுருதாலகால மலைப் பிரதேசமானது கல்வி மற்றும் சுற்றுலாத்துறையில் உயர் மதிப்பைக் கொண்டுள்ளதனால் அதிகளவில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளால் ஈர்க்கப்படுகிறது.
பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்ட இந்த இடமானது, சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |