தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லை - அடித்துக் கூறும் பிள்ளையான்
pillaiyan
tamil
parties
By Vanan
ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடர் விடயத்தில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்றைய தினம் சதோச வர்த்தக நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஒற்றுமை பற்றி கருத்துரைத்துவிட்டு தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் செயற்படுவதே போலித் தமிழ் தேசியவாதிகளின் செயற்பாடு. ஐ.நா. சபைக்கு நான்கு பகுதிகளில் இருந்தும் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினை திருப்திப்படுத்தும் வகையில் கடிதத்தினை எழுதியுள்ளார் என்றார்.