சாணக்கியன் விடுத்த சவாலை நிராகரித்தார் பிள்ளையான்
மட்டக்களப்பு மாவட்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சொத்து அபகரிப்பு குற்றச்சாட்டு தொடர்ந்தும் உக்கிரமடைந்து வருகின்றது.
இந்த விடயம் தொடர்பிலான திறந்த விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு, இரா.சாணக்கியன் மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சவால் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவரை எதற்காக விவாதத்துக்கு அழைப்பதென்பது, இரா. சாணக்கியனுக்கு தொியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினா் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தொிவித்துள்ளாா்.
சாணக்கியன் சவால் விடுத்தமை குறித்து ஐ.பி.சி. தமிழ், பிள்ளையானிடம் தொடர்பு கொண்டு வினவிய போதே பொறுப்பற்ற விடயங்களுக்கு பதிலளிக்க தாம் தயாரில்லை என்று கூறினாா்.
you may like this