சாமான்யர்களிடம் சண்டித்தனம் காட்டும் பிள்ளையான்
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக் கனவையும் தங்கள் சுயலாபங்களுக்காக சிதைத்து விட்டுப்போன, கூட்டமொன்றின் பங்காளியாக தமிழர் வரலாற்றில் கறைபடிந்த பக்கங்களை உருவாக்கியவர் தான் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன். தற்போது இராஜாங்க அமைச்சரும் கூட.
அவர் இப்போது தான் ஏதோ கிழக்கை மீட்க வந்த புனிதராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டும் அபிவிருத்தியின் பெயரில் மட்டக்களப்பு மக்களை ஏமாற்றி காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு துணை போவதோடு, ராஜபக்ச குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலை கிழக்கில் அரங்கேற்றும் பிரதான முகவராகவும் இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறார்.
தன்னோடு தோள்நின்ற போராளிகளின் வித்துடல்கள் புதைக்கப்பட்ட வாகரை - கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தைக் கூட காப்பாற்ற முடியாமல் தென்னந்தோப்பு ஆக்க முயற்சித்த பெருமையும் இவரையே சாரும்.
பிள்ளையான் தரப்பினர் அடாத்தாக காணி அபகரிப்பு - விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்; அம்பலப்படுத்திய முன்னாள் செயலாளர்! |
என்னதான் கல்நெஞ்சம் படைத்த இப்படியானவர்கள் முயற்சித்தாலும், இயற்கைகூட அந்தப் புனிதர்களின் வித்துடல்களை மீறி எதையுமே முளைத்தெழச் செய்யவில்லை.
இப்படியாக, மாவீரர்கள் விதைக்கப்பட்ட நிலங்களைக் கூட, கையகப்படுத்த நினைப்பவர் மக்களின் காணிகளை மக்களிடம் கையளிக்க விரும்புவாரா?
தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்காக முன்னின்று செயலாற்றுபவர்களை மிரட்டும் சண்டியராக உருவெடுத்திருக்கிறார் பிள்ளையான்.
அடாவடியில் பிள்ளையான் கும்பல்! அபரிக்கப்பட்ட அப்பாவி மக்களின் காணிகள் |
'பிள்ளையானால் எனது உயிருக்கு அச்சுறுத்தல்' - முன்னாள் காணி ஆணையாளர் |
அதன் ஒரு வெளிப்பாடாகவே சமூக சேவை செயற்பாட்டாளர் ஒருவருக்கு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
தனது விடயங்களில் தலையிட்டால் துரத்தி வந்து காலை அடித்து உடைப்பேன் எனவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல காணியற்ற மக்களுக்கு காணிகளை வழங்கக்கோரி பல சமூக சேவையில் ஈடுபட்ட ஒருவருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான காணி மாஃபியாக்களின் அட்டகாசங்கள் ஆங்காங்கே பதிவாகி வருகின்றன.
இந்தச் சூழலில் மட்டக்களப்பு மயிலம்பாவடி பகுதியில் சிவனேசதுரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்) ஆதரவாளர்களால் அடாத்தாக பிடித்து அடைத்து வைக்கப்பட்டிருந்த காணிகளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி அல்லாத மக்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன் பிரித்து எடுக்க முயற்சி செய்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
தமிழர் தாயக காணி அபகரிப்பின் பின்னணியில் பிள்ளையான் - கடுமையாக சாடிய சாணக்கியன் |