புலத்திலும் தாயகத்திலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பிள்ளையார் பாடல்!
பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் சாகோதரிகளான திருத்திகா சுகர்ணன்,மதுஷிகா சுகர்ணன் மற்றும் கனடாவில் பிறந்து வளர்ந்துவரும் இவர்களின் உடன்பிறவா சகோதரியுமாகிய தியானா இளங்கீரன் ஆகியோர், அவர்களின் பெற்றோர்களின் குல தெய்வமான பிள்ளையாரையும் அவர்கள் வசித்த ஊர்களிலும் அயல் ஊர் மற்றும் தாயகத்தில் பிரசித்திபெற்ற விநாயகர் ஆலயங்களை போற்றிப்பாடிய பாடல் புலத்திலும் தாயகத்திலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வித்தக கவிஞர் வேலணையூர் சுரேஷ் அவர்களின் வரிகளுக்கு இந்தியாவில் உள்ள p k சந்தோஷ்குமார் அவர்கள் இசை அமைத்துள்ளார்.
அழகான காட்சிப்படுத்தலும் இடம் பெற்றுள்ளது. தாயகத்தில் தென்மராட்சி பகுதியில் உள்ள உசன் என்ற ஊரை சேர்ந்த இவர்களின் பேர்த்தியாரான இறஞ்சிதமலர் வெற்றிவேலு சங்கீத ஆசிரியை என்பது குறிப்பிடதக்கதாகும்.
தை பொங்கல் வெளியீடாக கடந்த வாரம் இப் பாடல் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.
