அசாத் மௌலானாவை அச்சத்தில் பின் தொடர்ந்த பிள்ளையான்: அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் (Pillayan) எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புகள் இருப்பதாக அசாத் மௌலானா என்றழைக்கப்படும் ஹன்சீர் முஹம்மத் பரபரப்பு தகவல்களை வெளியிட்டிருந்தார்.
பிள்ளையானின் வேண்டுகோளின் பிரகாரம் பிள்ளையானுக்கு நெருக்கமான தான் உள்ளிட்ட குழுவொன்று இராணுவப் புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், தற்போது அசாத் மௌலானா வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வரும் நிலையில் இந்தியாவிற்கு (India), தப்பி ஓடிய போதும் அவரை பிள்ளையான் பின்தொடர்ந்து சென்றதாக அவர் தெரிவித்திருந்தார்.
அத்தோடு, புலனாய்வுத்துறை அதிகாரி சுரேஸ் சாலேவும் அசாத் மௌலானாவை தொடர்ந்தாகவும் அது குறித்த குரல் பதிவுகள் தன்னிடம் இருப்பதாவும் கூட அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு பிள்ளையான் அசாத் மௌலானாவை பின் தொடர்ந்ததன் முக்கிய பின்னணி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்த முழுமையான பின்னணி, அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
