இங்கிலாந்து அணியை இன்று களத்தில் சந்திக்கவுள்ள இலங்கை மகளிர் அணி!
2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று (11.10.2025) மோதவுள்ளன.
அதன்படி, குறித்த போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, இம்முறை மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலியா அணி 5 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது.
புள்ளிப்பட்டியல்
இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் 4 புள்ளிகளுடன் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், நியூசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் இரண்டு புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளன.
இலங்கை மகளிர் அணி மற்றும் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டதால் ஏழாவது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
