கொலை வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்!
புதிய இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஜுலை மாதம் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இன்று (30.06.2026) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 நாட்களுக்கு முன்னர், அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
முக்கிய வழக்குகள்
மேலும் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கொன்றில் 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 உயிரிழப்புகளுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் குறித்த CID விசாரணைகளில் சந்தேகநபராக பெயரிடப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.
2008 ஜனவரி 9 – கல்லடியில் 2 பேர் சுட்டுக்கொலை, 2008 மே 22 – காத்தான்குடியில் 2 பேர் சுட்டுக்கொலை , 2008 ஆகஸ்ட் 20 – வவுணதீவு பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சமபவம் குறித்து இந்த விசாரணைகள் முன்னனெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வழக்குகளில் பிள்ளையான் உட்பட 3 பேர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக CID நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தற்போது வேறு ஒரு வழக்கில் விளக்கமறியலில் உள்ள பிள்ளையானை அடுத்த விசாரணை நாளில் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கடந்த 16ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.
மேலும் இரு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த ஐந்து மனிதக் கொலைச் சம்பவங்களினதும் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார்.
இவர் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இன்று (30.06.2026) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த 14 நாட்களுக்கு முன்னர் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இன்றையதினம் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 21 மணி நேரம் முன்