சிக்கித் தவிக்கும் பிள்ளையான் : 90 நாள் தடுப்புக்காவல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) மேலும் விசாரிக்க 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த எட்டாம் திகதி மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் பிள்ளையான் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
தடுப்புக்காவல்
2006 ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
