பிரித்தானியாவில் உள்ள பொலிஸ் பாயிஸை நாடுகடத்த புலனாய்வாளர்கள் இரகசிய திட்டம்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துறை சந்திரகாந்தனின் விசாரணையில் சிக்கும் சந்தேகநபர்கள் தொடர்பில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டதான செய்திகள் அண்மைய நாட்களில் பேசுபொருளாகியிருந்தது.
இதன் தொடர்ச்சியில் மட்டக்களப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறப்பு விசாரணையில் முகமட் ஷாகித் என்ற பிள்ளையானின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஷாகித், செய்ததாக அறியப்படும் குற்றச்செயல்கள், மனித மனங்களை அச்சநிலைக்கு கொண்டு செல்கின்றன.
குறித்த நபரை கைதுசெய்து, பிரித்தானியாவில் தஞ்சம் கோரி இருக்கும் முக்கிய சூத்திரதாரியான பொலிஸ் பாயிஸ் என்பவரை நாடுகடத்துவதே இலங்கை புலனாய்வாளர்களின் திட்டம் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய பயங்கரவாத குழுவான திரிபோலி குழுவின் உறுப்பினராக கருதப்படும் ஷாகித்திடம் மேற்கொள்ளும் விசாரணைகளில், அவர் அதில் இருந்தபோது எவ்வாறான குற்றச்செயல்களை புரிந்தார், அவர் செய்த படுகொலைகள், அதற்கு பயன்படுத்திய ஆயுதங்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் எங்கு மறைக்கப்பட்டது என்ற உண்மைள் வெளிவரும் எனவும் நம்பப்படுகிறது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஷாகித் என்ற சந்தேகநபர் விசாரணையில் வெளிப்படுத்தப்படும் உண்மைகளில் எதிர்பாராத பல மறைக்கப்பட்ட நீதியின் பக்கங்கள் வெளிவரும் என எதிர்பாரக்கப்படும் நிலையில் அதனை விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
