நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து
தனது மீது குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலி குற்றச்சாட்டுக்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான் ) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான், மீண்டும் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்படும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 14 நாட்களுக்கு முன்னர் பிள்ளையானுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை இன்று (30-06-2026) மட்டக்களப்பு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பொய்க் குற்றச்சாட்டுக்கள்
விசாரணைகளை அடுத்து பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படும் போது அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிள்ளையானிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை அநுரவின் வாயைப் போல அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள் என பிள்ளையான் பகிரங்கமாக அறிவித்துவிட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |