“இதுவா ராஜபக்சர்களின் திட்டம்” உடைப்பெடுக்கும் ஆளும் தரப்பு?
கீழ் மட்ட மக்கள் வாழக்கூடிய பின்னணியை நாட்டில் உருவாக்க வேண்டும் என்பதே அனைவரினதும் கோரிக்கையாக அமைந்துள்ளதென ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார (Jagath Kumara) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் (22) ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், அது முடியாவிட்டால் தாமும் எதிர்க்கட்சியில் சென்று அமர நேரிடும் என அரச தரப்பை கடுமையாச் சாடியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டில் தற்பொழுது நிலவி வரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கொவிட் பெருந்தொற்றை மட்டும் குறை சொல்லிவிட முடியாது.
மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் அனுபவம் மற்றும் தேசப்பற்று என்பன நாட்டை கட்டியெழுப்பும் என கருதினோம்.
அவர்கள் இருவரும் நாட்டை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றார்கள் என்றே நான் இன்று வரையில் நினைக்கின்றேன்.
எனினும், வியத் மக மற்றும் மக்கள் ஆதரவு அலையில் வந்தவர்கள் பதவியில் அமர்ந்து கொண்டு நாட்டை அழிப்பதற்கு உதவுகின்றார்களா என்ற கேள்வியும் எழுகின்றது.
இதனால் தான் சிலர் வியத் மக (புத்திஜீவிகளின் வழி) அல்ல, இது கியத் மக (அறுக்கும் வழி) எனக் குறிப்பிடுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.