ஓடுதளத்தில் திடீரென பற்றி எரிந்த விமானம்: ஜப்பான் விமான நிலையத்தில் பதற்றம்(காணொளி)
ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் உள்ள விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது, இன்று(02) இடம்பெற்றுள்ளது.
ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய போது கடலோர காவல்படை விமானமொன்றில் மோதியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம்
அத்தோடு , விபத்தின் போது விமானத்தில் 379 பயணிகள் இருந்ததோடு, அவர்கள் அனைவரும் எந்தவித ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, விபத்தினால் கடலோர காவல்படை விமானமும் தீப்பிடித்து எரிந்துள்ளதாக டோக்கியோவின் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், அந்நாட்டின் கடலோரக் காவல்படை, விபத்திற்கான காரணங்களை ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
【羽田空港 日本航空の機体が炎上】
— NHKニュース (@nhk_news) January 2, 2024
国土交通省東京空港事務所によりますと、羽田空港でJALの旅客機から炎があがっていると聞いているが客が搭乗しているかどうかなどはまだわからない、情報を確認中だと話していました。https://t.co/UGWveQ1hVi#nhk_video pic.twitter.com/s4YDQhcfll