சீரற்ற வானிலை காரணமாக விமான விபத்து! ஐவர் பலி
போலந்து நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று மோதிய விபத்தில் சிக்கிய ஐவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் (17) மாலை வேளை போலந்து நாட்டின் கிரிசினோ(Chrcynno) நகரில் உள்ள விமான நிலைய கொட்டகையில் சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் விமானியுடன் நான்கு பேர் உள்ளடங்கலாக ஐவர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்கை டைவிங்கிற்கு (skydiving) பயன்படும் செஸ்னா 208 (Cessna 208) என்ற சிறிய ரக விமானமே விபத்தில் சிக்கி இருப்பதாக போலந்து நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்கான காரணம்
சீரற்ற வானிலை காரணமாக உடனடியாகத் தரையிறங்க முற்பட்ட வேளையிலேயே விமான நிலையத்திற்கு அருகில் இருந்த கொட்டகையில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளதாக தீயணைப்பு துறை செய்தி தொடர்பாளர் மோனிகா நோகோவ்ஸ்கா-பிரைண்டா தகவல் தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக பொதுமக்கள் விமான கொட்டகையில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் எதிர்பாராத வேளையில் திடீரென நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி ஐவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலந்து நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆடம் நீட்ஜில்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.