மிச்சிகனில் விமான விபத்து! 4 பேர் பலி
death
Plane Crash
Michigans
By Vanan
மிச்சிகன் - பீவர் தீவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிச்சிகன் நாட்டின் மேக்கினாவ் நகருக்கு மேற்கே உள்ள பீவர் தீவில் உள்ள விமான நிலையத்தில், இரட்டை இயந்திரம் கொண்ட விமானம் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.
இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஐந்து பேரில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் பயணித்தவர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், விமான விபத்துக் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.