அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிக்காரர்கள்..! ஜூன் மாத கிரகப் பெயர்ச்சி பலன்கள்!
வேத ஜோதிடத்தின் அடிப்படையில், நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுகின்றன.
இவ்வாறு மாறும்பொழுது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
அந்தவகையில், ஜூன் மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன, இதனால் இந்த ஜூன் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது.
கிரகப் பெயர்ச்சி
2023 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் புதன், சூரியன், சனி போன்ற கிரகங்களின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படவுள்ளது.
குறிப்பாக புதன் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளதுடன், மாதத்தின் இறுதியில் அஸ்தமனமாகவுள்ளார்.
மேலும் நீதிமான் சனி பகவான் கும்ப ராசியில் வக்ரமாகவுள்ளதுடன், சூரியனும் ராசியை மாற்றவுள்ளார்.
முக்கியமான கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்கள் இம்மாதத்தில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப் போகிறார்கள்.
2023 ஜூன் - புதன் பெயர்ச்சி
புத்திகாரரான புதன் ஜூன் 07 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கிறார்.
ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல புத்திசாலித்தனமானவராக, சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக, வியாபாரத்தில் சிறந்தவராக இருப்பார்.
2023 ஜூன் - சூரிய பெயர்ச்சி
வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக சூரியன் கருதப்படுகிறார். சூரிய பகவான் மாதந்தோறும் ராசியை மாற்றுவார்.
ஜூன் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து சூரியன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஒருவரது ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் எப்போதும் வாழ்வில் நல்ல வெற்றியைக் காண்பார்.
2023 ஜூன் - சனி வக்ர பெயர்ச்சி
கிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். ஆகவே, சனியின் இயக்கத்தில் ஏற்படும் சிறு மாற்றமும், அனைத்து ராசிகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது சனி கும்ப ராசியில் பயணித்து கொண்டிருக்கிறார். இவர் ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.
இந்த வக்ர நிலையில் நவம்பர் வரை இருப்பார். ஆகவே சனி வக்ர நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்கள் மோசமான பலன்களையும், சிலர் நற்பலன்களையும் பெறுவார்கள்.
2023 ஜூன் - புதன் அஸ்தமனம்
ஜூன் 7 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்த புத்திகாரகன் புதன், ஜூன் 19 ஆம் தேதி அஸ்தமனமாகவுள்ளார்.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அஸ்தமனமாகும் போது, வலுவிழந்து இருப்பதால், கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் கிடைக்காமல் போகும்.
எனவே ஜூன் மாதத்தில் புதன் அஸ்தமனமான பின், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்காது.
2023 ஜூன் - புதன் பெயர்ச்சி
ஜூன் 19 ஆம் தேதி ரிஷப ராசியில் அஸ்தமனமான பின், ஜூன் 24 ஆம் தேதி அஸ்தமன நிலையிலேயே புதன் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.
புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு அஸ்தமன நிலையில் நுழைவதால், புதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் கிடைக்காது.
அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
ஜூன் மாதத்தில் 3 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.
இருப்பினும், கிரகங்களின் நிலைகளால் 3 ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
அதில் ரிஷபம், சிம்மம், தனுசு போன்ற ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளார். குறிப்பாக தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணி புரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
வியாபாரிகள் நல்ல இலாபத்தைக் காண்பார்கள், மொத்தத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாக இருக்கும்.
