சட்டவிரோதமாக கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் அதிரடியாக கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Passport
By Sathangani
கணேமுல்ல காவல்துறை பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் 83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையுமே காவல்துறையினர் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
கணேமுல்ல காவல் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட குறித்த ஆண் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்றும், பெண் கணேமுல்லயைச் சேர்ந்த 62 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்