தனிப்பட்ட பயணங்களுக்கு மெட்ரோ பேருந்துகளை வாடகைக்கு பெறும் புதிய சேவை
மெட்ரோ பேருந்து சேவை முழுமையாக நடைமுறைக்கு வந்த பின்னர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் தனிப்பட்ட பயணங்களுக்காக மெட்ரோ பேருந்துகளை வாடகைக்கு பெறும் புதிய சேவையை அறிமுகப்படுத்த லங்கா மெட்ரோ டிரான்சிட் திட்டமிட்டுள்ளது.
வார இறுதிகளில் வழக்கமான பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அந்த காலப்பகுதியில் மெட்ரோ பேருந்துகளை சிறந்த முறையில் பயன்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக லங்கா மெட்ரோ டிரான்சிட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தத் திட்டம் திட்டமிடல் கட்டத்தில் உள்ளதாகவும், மெட்ரோ பேருந்து சேவை முழுமையாக ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இதனை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்கா மெட்ரோ டிரான்சிட்டின்
அதன்படி, ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் பொதுமக்கள் தனிப்பட்ட பயணங்களுக்காக மெட்ரோ பேருந்துகளை வாடகைக்கு பெறும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், தனிப்பட்ட பயணங்களுக்கு பேருந்தை வாடகைக்கு பெற விரும்புவோர், அதற்காக அறிவிக்கப்படும் மெட்ரோ பேருந்து தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முன்பதிவு செய்ய முடியும்.
மேலும், இந்த சேவையின் மூலம் பாதுகாப்பானதும் வசதியானதுமான பயண அனுபவத்தை பயணிகளுக்கு வழங்க முடியும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
பேருந்துகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |