பணம் திருடியதை கண்டுபிடிக்கலாம் இருக்க ஆலைக்கு தீ வைத்த தொழிலாளி!
குவைத்தின் முபாரக்கியா பகுதியில் உள்ள ஒரு கடையில்(Mill) நேற்று ஏற்பட்ட தீ விபத்து வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டது எனவும் தற்செயலாக நடக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தீ விபத்து நடந்த இடத்தில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்த பின்னர், ஒருவர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கடையின் அடித்தளத்தில் தலைமறைவாகி இருப்பதும், அவர் அடித்தளத்தை விட்டு வெளியேறிய பின்னர் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அதாகாரிகள் தெரிவித்துள்ளர்.
மேலும் அதிகாரிகள் கூடுதலாக நடத்திய விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்ட நபரின் அடையாளத்தை தீர்மானித்தன, குற்றவாளி அங்குள்ள தொழிலாளர்களில் ஒருவர் மற்றும் அவர் ஆசிய நாட்டை சேர்ந்தவர் என்பது தெளிவாகியது.
மூன்று மணி நேரம் அடித்தளத்தில், 9,000 தினார்கள் தொகை திருடப்பட்டது, திருட்டு குற்றம் கண்டுபிடிக்கப்படமால் இருக்க அவர் தீவைத்துள்ளார்.
ஆதாரங்கள் அடிப்படையில் கூடுதலான சட்ட நடவடிக்கை எடுக்க குற்றவாளி சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.