தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் - முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
Sri Lanka Upcountry People
Sri Lanka
Sri Lankan Peoples
By Raghav
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை வேதனத்தை 2000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (31.07.2025) ஹட்டன் நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தோட்ட தொழிலாளர்கள்
ஹட்டன் பிரதான பேருந்து நிலையத்தில் இதன்போது கையேடுகளும், விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
தோட்ட தொழிலாளர்கள் மத்திய நிலையம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, மக்கள் போராட்ட இயக்கம் ஆகியன இணைந்து இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டன.
பெருந்தோட்ட மக்களுக்கு உண்மையான குடியுரிமையை வழங்குமாறும், தோட்ட அடிமை முறையை முடிவுறுத்துமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்