ரி20 வரலாற்றில் மோசமான சாதனையொன்றை படைத்த இலங்கை வீரர்
Sri Lanka Cricket
Sri Lankan Peoples
Dasun Shanaka
By Dhilak
சர்வதேச ரி20 கிரிக்கெட் களத்தில் அதிக தடவைகள் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்த வீரர் என்ற சாதனையை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானக (Dasun Shanaka) பெற்றுள்ளார்.
அதன்படி, நேற்றுமுன்தினம் (16) இடம்பெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
12 தடவைகள்
இந்த நிலையில், தசுன் விளையாடிய ரி20 சர்வதேசப் போட்டிகளில் 12 தடவைகள் ஓட்டம் பெறாமல் மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

மேலும், இதற்கு முன்னதாக 80 போட்டிகளில் 10 முறை ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்த சாதனையை முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான் (Tillakaratne Dilshan) பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்