வீட்டிலிருந்து வெளியே செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
corona
people
sudarshini fernandopulle
By Shalini
இதுவரையில் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சரான விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு, கட்டான பகுதியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எந்த வகையான தடுப்பூசி என்று பார்த்துக்கொண்டிருக்காமல், அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் மையத்திற்கு சென்று, ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
டெல்டா திரிபு மிக வேகமாக பரவுவதனால், வீட்டிலிருந்து வெளியேறுபவர்கள், மக்கள் கூடி இருந்தால், அந்த இடத்தில் தேநீர் அருந்தவோ அல்லது தண்ணீர் அருந்தவோ முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் என இராஜாங்க அமைச்சரான விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்தியுள்ளார்.