நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ எடுத்துள்ள சபதம்
People
Corona Vaccine
Harin Fernando
By Vasanth
கொவிட் பாதிக்கப்படக்கூடிய பெருமளவு மக்கள் நாட்டில் உள்ள நிலையில் தான் தற்போது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளப்போவதில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பொதுமக்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நாட்டில் குறைந்தது ஒரு மில்லியன் மக்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே, தான் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வேன் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ள நிலையிலேயே, அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.