உள் வீட்டிற்குள் இருந்தே சதி -அம்பலப்படுத்திய இராஜாங்க அமைச்சர்
இலங்கைக்குள் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் வகையில், அரசாங்கத்திற்குள் இருக்கும் குழுவொன்று செயற்பட்டுவருவதாக இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க (Sehan Semasinghe)தெரிவித்துள்ளார்.
அவ்வாறான தனிநபர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படும் என இப்பன்கட்டுவ பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் சகித்துக்கொள்ள முடியும் என்ற போதிலும் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு செயற்படுவது துரதிஷ்டவசமானது என அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் தொடர்பில் பொதுமக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்துவதன் மூலம் என்ன வெற்றியை அடைய முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆகவே இந்த விடயத்தில் மூன்றாவது தரப்பொன்றின் தலையீடு இருப்பது தெளிவாக தெரிகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.